Home Featured நாடு “மொராயிசின் உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்” – குடும்பத்தினருக்கு காவல்துறை வலியுறுத்து!

“மொராயிசின் உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்” – குடும்பத்தினருக்கு காவல்துறை வலியுறுத்து!

510
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறை தங்களிடம் தெரிவிப்பதாக மொராயிசின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்தால் மட்டுமே தாங்கள் மொராயிசின் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மொராயிசின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி முதல் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

காவல்துறை, பிரேதப் பரிசோதனை நிபுணர்கள் மற்றும் சட்டத்துறைத் தலைவரின் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடையே நடைபெற்ற ஒரு தனிப்பட்ட கூட்டத்தில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மொராயிசின் சடலத்தைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்கள் கூறியதாக, மொராயிஸ் குடும்ப உறுப்பினர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மொராயிசின் இறப்பு குறித்து இன்னும் தங்களுக்கு சரியான காரணம் தெரியவில்லை என்று கூறி வரும் மொராயிஸ் குடும்பம், இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

மூச்சுத்திணறலால் மொராயிஸ் இறந்துள்ளார் என்று காவல்துறை வெறும் வாய் வார்த்தையால் மட்டுமே உறுதிப்படுத்தியிருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புத்ராஜெயாவில் இருந்து பிரேதப் பரிசோதனை அறிக்கையின் நகலைப் பார்க்க வேண்டுமானால், மொராயிசின் குடும்பம் சட்டத்துறைத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகின்றது.

“எங்களுக்கு பிரேதப் பரிசோதனை நகலை தர இயலாது என்கிறது காவல்துறை. காரணம் அதை நட்பு ஊடகங்களில் வெளியிட்டுவிடக்கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர்.” என்று குடும்பத்தினரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.