Home Slider கறுப்பின மாணவர்களை அவமதித்த ஆப்பிள் ஊழியர் – மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்!

கறுப்பின மாணவர்களை அவமதித்த ஆப்பிள் ஊழியர் – மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்!

504
0
SHARE
Ad

appleமெல்பர்ன் – மெல்பர்ன் நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் கிளை ஒன்றிற்கு சென்ற ஆறு கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் நடந்த சம்பவத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

சமீபத்தில் நட்பு ஊடகங்களில் ‘சிம்பிள் ரேஸிசம்’ (Simple Racism) என்ற பெயரில் காணொளி ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருப்பினத்தைச் சேர்ந்த ஆறு பள்ளி மாணவர்கள் மெல்பர்னில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அவர்களை அந்த ஸ்டாரின் ஊழியர் வாயிலிலேயே தடுத்து நிறுத்தி ‘உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள் ‘ஏன் நாங்கள் எதையாவது திருடிவிடுவோமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் கடை ஊழியரோ பிடிவாதமாக ‘வீண் வாக்குவாதங்களை விட்டு விட்டு உடனடியாக இங்கிருந்து வெளியே செல்லுங்கள் ‘ என்று அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்த அந்த மாணவர்களில் ஒருவர், ‘சிம்பிள் ரேஸிசம்’ என்ற பெயரில் அதனை வெளியிட, ஆப்பிளுக்கு நிறுவனத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

நடக்க இருக்கும் விபரீதத்தை புரிந்து கொண்ட ஆப்பிள் நிர்வாகம், உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்னிப்பு கோரியது. ஆப்பிள் தலைவர் டிம் குக்கும் இதுபற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார். மேலும், குறிப்பிட்ட அந்த ஆப்பிள் ஸ்டோரின் மேலாளர் நேரடியாக அந்த மாணவர்கள் பயிலும் பள்ளிக்கே சென்று அந்த மாணவர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் மன்னிப்பு கோரி இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

மாணவர்கள் அவமதிக்கப்படும் அந்த காணொளியை கீழ் காண்க: