கோலாலம்பூர் – நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கேஎல்-காராக் நெடுஞ்சாலையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், நாளை சனிக்கிழமை வரை கிலோமீட்டர் 52.4 வரையில் சாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வானிலையைப் பொறுத்தும், நிலச்சரிவு நிபுணர்களின் ஆலோசனைகளின் படியும், சாலை மீண்டும் திறக்கும் நேரம் தள்ளிப் போகக் கூடும் என்று பெந்தோங் காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் மொகமட் மன்சோர் மொகமட் நோர் தெரிவித்துள்ளார்.
“மண்சரிவு மீண்டும் ஏற்படலாம் எனக் கருதினால், நெடுஞ்சாலையை இன்னும் சில நாட்களுக்கு மூடி வைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அதுவரையில், அச்சாலையைப் பயன்படுத்துபவர்கள் பொறுமையுடன், அதற்கு மாற்றாக உள்ள சாலையைப் பயன்படுத்தும் படியும் மொகமட் தெரிவித்துள்ளார்.