Home Featured வணிகம் ஃபார்ச்சூன் வெளியிட்ட சிறந்த வர்த்தகர்களுக்கான பட்டியலில் மூன்று இந்திய வம்சாவளியினர்!

ஃபார்ச்சூன் வெளியிட்ட சிறந்த வர்த்தகர்களுக்கான பட்டியலில் மூன்று இந்திய வம்சாவளியினர்!

666
0
SHARE
Ad

ajay-banga-satya-nadella-francisco-dsouzaநியூ யார்க் – ஃபார்ச்சூன் இதழ் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த 50 வர்த்தகர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாஸ்டர் கார்ட்டின் தலைமை நிர்வாகி அஜய் பங்கா மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா உட்பட மூன்று இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

ஃபார்ச்சூன் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் உலகின் சிறந்த வர்த்தகர்களுக்கான பட்டியல் இந்த ஆண்டும் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் பிரபலமான பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஆப்பிள் தலைவர் டிம் குக் ஆகிய இருவரும் முறையே இரண்டாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளனர்.

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியாவுமியின் தலைவர் லை ஜூனிற்கு ஏழாம் இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், லை ஜூனை விட பிரபலமான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மாவிற்கு 25-ம் இடம் கிடைத்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியினரான காக்னிசன்ட் தலைவர் பிரான்சிஸ்கோ டிசோசாவிற்கு 16-வது இடமும், சத்யா நாதெல்லாவிற்கு 47-வது இடமும் கிடைத்துள்ள நிலையில், அஜய் பங்கா, ஆப்பிள் தலைவருக்கு அடுத்த இடமான ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடம் விளையாட்டு கருவிகளை தயாரிக்கும் நைக் நிறுவனத்தின் தலைவர் பார்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.