Home Featured உலகம் பாரீஸ் தாக்குதல்: அச்சத்தில் அங்குள்ள மலேசிய மாணவர்கள்!

பாரீஸ் தாக்குதல்: அச்சத்தில் அங்குள்ள மலேசிய மாணவர்கள்!

600
0
SHARE
Ad

Parisகோலாலம்பூர் – பாரீஸ் நகரில் படித்து வரும் மலேசிய மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு அங்கு 7 இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அதில் மலேசியர்கள் உள்ளனரா? என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இதனிடையே, அங்கு வணிக நிர்வாகம் படித்து வரும் எல்லி என்ற மாணவி ஸ்டார் இணையதளத்திற்கு அளித்துள்ள தகவலில், பாரீஸ் நகரில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அடைந்துள்ளனர். நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அங்கு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.