Home Featured நாடு பாரீசில் வசிப்பவர்கள் பேஸ்புக் மூலமாக பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்யலாம்!

பாரீசில் வசிப்பவர்கள் பேஸ்புக் மூலமாக பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்யலாம்!

597
0
SHARE
Ad

Parisகோலாலம்பூர் – பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் அங்குள்ளவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதை தங்களது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் உறுதி செய்ய புதிய வசதியை தற்போது வெளியிட்டுள்ளது.

https://www.facebook.com/safetycheck/paris_terror_attacks என்ற இணைப்பை அழுத்தினால் ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் பாரீஸ் நகரில் வசிக்கும் நமது நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை அதில் உறுதி செய்திருப்பார்கள். நாமும் அவர்களின் குறியீட்டை அறிந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

அல்லது அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உங்களுக்கு தெரிந்தால், அவர்கள் சார்பில் நீங்களும் உறுதி செய்யலாம்.