Home உலக சினிமா உலகை மகிழ்வித்த மிஸ்டர் பீனின் 24 வருட திருமணவாழ்வு கசந்தது!

உலகை மகிழ்வித்த மிஸ்டர் பீனின் 24 வருட திருமணவாழ்வு கசந்தது!

659
0
SHARE
Ad

Eng actor Rowan Atkinsonலண்டன் – உலக அளவில் சிறியவர் முதல் பெரியவர் வரை லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளங்களைக் கொண்டவர் ரோவன் அட்கின்சன். இந்த பெயரை விட இவர் நடித்த மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் உடனே தெரியும்.  உலகை தனது நகைச்சுவை நடிப்பால் சிரிக்க வைத்த அட்கின்சன், தனது காதல் மனைவி சுனேத்ரா சாஸ்திரியை விவாகரத்து செய்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனேத்ராவை 1990-ம் ஆண்டு திருமணம் செய்த ரோவன் அட்கின்சனுக்கு, தற்போது இளம் பெண் ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளதால் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு விவாகரத்து கேட்டு இங்கிலாந்து குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த இந்த தம்பதியினருக்கு நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

அட்கின்சனுக்கு தற்போதய வயது அறுவது என்பது குறிப்பிடத்தக்கது.