Home Featured உலகம் பாரிஸ் தாக்குதல்: தாக்குதல்காரன் ஒருவன் அடையாளம் காணப்பட்டான் – தொடர்புடைய மேலும் சிலர் கைது!

பாரிஸ் தாக்குதல்: தாக்குதல்காரன் ஒருவன் அடையாளம் காணப்பட்டான் – தொடர்புடைய மேலும் சிலர் கைது!

807
0
SHARE
Ad

பாரிஸ்: பாரிஸ் நகரத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதன் மரண எண்ணிக்கை 129 ஆக உயர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350க்கும் மேல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் சுமார் 100 பேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாகப் புலனாய்வில் இறங்கிய பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு அதிகாரிகள் முதல் தாக்குதல்காரனை அடையாளம் கண்டுள்ளனர். மேலும் சிலரைக் கைது செய்துள்ளனர்.

Paris attacks aftermath

#TamilSchoolmychoice

தேடுதல் வேட்டையிலும், பாதுகாப்பிலும் ஈடுபட்டிருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிரடிப் படையினர்….

இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் அதிரடித் தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிகாரிகள் சில தகவல்களைத் திரட்டியுள்ளனர்.

பெல்ஜியம் நாட்டின் புருஸ்சல்ஸ் நகரில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கார் ஒன்று பாரிசில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொலன்பீக்-செயிண்ட்-ஜீன் (Molenbeek-Saint-Jean) என்ற பகுதியில் உள்ள மூன்று இல்லங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். தாக்குதல் நடத்தியவர்களில் சிலரின் அடையாளங்களை பெல்ஜியம் புலனாய்வுத் துறையினர் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பாரிசில் இருந்து கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாக்குதல்காரனின் இல்லம் ஒன்றில் பரிசோதனை நடத்திய பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், தாக்குதல்காரனின் தந்தையையும், சகோதரனையும் தடுத்து வைத்துள்ளனர்.

தற்கொலைத் தாக்குதல்காரர்களில் ஒருவன் இஸ்மாயில் ஒமார் மொஸ்டிஃபாய் (Ismael Omar Mostefai) என்ற பெயருடையவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான். இவன் பிரான்சின் சார்ட்டர்ஸ் என்னும் ஊரில் 2012 வரை தங்கியிருந்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.