Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் அடிக்கவில்லையாம்..ஆசிர்வதித்தாராம் – பண்ருட்டி எம்எல்ஏ சமாளிப்பு!

விஜயகாந்த் அடிக்கவில்லையாம்..ஆசிர்வதித்தாராம் – பண்ருட்டி எம்எல்ஏ சமாளிப்பு!

497
0
SHARE
Ad

vijayசென்னை –  கடலுார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்துவை பொதுமக்கள் முன்னிலையில் அடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விஜயகாந்திடம் அடிவாங்கியதை தான் ஆசிர்வாதமாகவே கருதுவதாக சிவகொழுந்து, இன்று பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் மனதில் ஒன்றை வைத்து வெளியே ஒன்று பேசாத தலைவர் விஜயகாந்த். தவறு என்றால் யாரென்றும் பார்க்கமாட்டார். நேரடியாக காட்டி விடுவார். மற்றபடி மனதில் வைத்து கொண்டு செயல்படுபவர் அல்ல. இந்த சம்பவத்தை பொறுத்தவரை நிவாரண உதவிகள் வழங்கிய இடத்தில் பொதுமக்களை அவரால் சரியாக பார்க்க முடியவில்லை. அந்த கோபத்தில்தான் என்னை அடித்தார்.”

“மாவட்ட செயலாளர்தானே இது போன்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பு என்ற எண்ணத்தில்தான் எனது தவறை சுட்டி காட்டும் வகையில் அடித்தார். அதற்கு பின்னரே எனது தவறு எனக்கு புரிந்தது. முறையான ஏற்பாடு செய்யாதற்கு அவர் தண்டனை கொடுத்தார். விஜயகாந்திடம் அடிவாங்குவது ஆசிர்வதிப்பது போல, இதற்கெல்லாம் நாங்கள் வருந்த மாட்டோம். கட்சித் தொண்டன் தலைவரிடம் அடி வாங்குவது ஆசி பெறுவது போன்றுதான். உரிமையுடன் அவரோடு  நெருக்கமாக இருப்பதாகவே கருதுவோம் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.