கோலாலம்பூர் – குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், வன்முறைகளையும் குறைக்கும் நோக்கத்துடன் பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் ஜே பாரிக் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும், பேஸ்புக்கில் 2 பில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அப்படி பதிவேற்றப்படும் புகைப்படங்கள் பெரும்பாலும் பயனர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குழந்தைகளாகத் தான் உள்ளது. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் பொது பகிர்த்தலாக இல்லாமல் இருக்க பல்வேறு வசதிகள் பேஸ்புக்கில் ஏற்கனவே உள்ளன.
எனினும், ஒருவேளை தவறுதலாக குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் பொது பகிர்ந்தலில் (Public Share) பகிரப்பட்டால், தேவையற்ற சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் பேஸ்புக் தற்போது இந்த புதிய எச்சரிக்கை வசதியை மேம்படுத்த உள்ளது.
எனினும், இந்த வசதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை.