Home தமிழ் நாடு ஆச்சரியம்: ஜெயா அரசுக்கு கருணாநிதி ஆதரவு!

ஆச்சரியம்: ஜெயா அரசுக்கு கருணாநிதி ஆதரவு!

541
0
SHARE
Ad

Tamil nadu 2சென்னை – கனமழை காரணமாக தமிழகத்தின் 25 மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

chennai-rain-480இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்த நேரத்தில், கனமழை தொடரும் என்பதால், மக்களை காப்பாற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவு அளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.