Home Featured தமிழ் நாடு தமிழக வெள்ளம்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

தமிழக வெள்ளம்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

651
0
SHARE
Ad

chennai-rain-480சென்னை – தமிழகத்தை உலுக்கியுள்ள பெருமழையும் அதைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப் பெருக்கும் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:

  • பல பகுதிகளில் மின்வசதிகள் தடையால் – கைத்தொலைபேசிகள் மின்சக்தி ஊட்டப்பட முடியாமல் (சார்ஜ்) செயலிழந்து கிடப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே, உறவினர்களிடையே தொடர்புகள் துண்டிப்பு.
  • இதுவரை மரணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.
  • அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக கன்னியாகுமரி, வேலூர், கடலூர், விழுப்புரம் பிரகடனம்
  • வரலாறு காணாத அளவில் அளவுக்கதிகமான மழை பெய்ததன் காரணமாகத்தான் பெருவெள்ளம் ஏற்பட்டதென அரசாங்கத் தரப்பில் விளக்கம்.
  • தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள்
  • அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை இலாகா எச்சரிக்கை
  • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜெயலலிதா நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார்
  • சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் 12 இரயில் சேவைகள் வெள்ளம் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
  • தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை