Home Featured இந்தியா வந்துவிட்டது ராம்தேவின் ‘பதஞ்சலி’ நூடுல்ஸ் – உடல்நலத்திற்கு ஏற்றது!

வந்துவிட்டது ராம்தேவின் ‘பதஞ்சலி’ நூடுல்ஸ் – உடல்நலத்திற்கு ஏற்றது!

1077
0
SHARE
Ad

Tamil_News_large_1388663புதுடில்லி – கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து மக்களிடையே நூடுல்ஸ் மோகம் சற்று குறைந்திருந்தது. அதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வை அடைந்திருந்தார்கள். என்றாலும் நூடுல்ஸ் அளித்த ருசியை முற்றிலும் மறக்க இயலாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத, உடனடி நுாடுல்ஸ் தயாரிக்கப்பட்டு, நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

முற்றிலும், உடல்நலத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில், காரீயம், ரசாயன உப்பு ஆகியவை நீக்கப்பட்டு, இயற்கைப் பொருட்களைக் கொண்டு இதைத் தயாரித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது 70 கிராம் எடையுள்ள பாக்கெட், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள், நாடு முழுவதும் இந்த நுாடுல்சை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது பதஞ்சலி நிறுவனம்.