இத்தொகையை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் பதஞ்சலி தயாரிப்புப் பொருட்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது.
இதனால் அந்நிறுவனத்தின் வருமானமும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது ஆண்டு வருமானமாக 5000 கோடி ரூபாய் ஈட்டி வரும் அந்நிறுவனம், அடுத்த நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் ஈட்டும் என்று கூறப்படுகின்றது.