Home Featured வணிகம் பன்னாட்டு நிறுவனங்களைப் பதஞ்சலி விஞ்சி நிற்கும் – பாபா ராம்தேவ் சபதம்!

பன்னாட்டு நிறுவனங்களைப் பதஞ்சலி விஞ்சி நிற்கும் – பாபா ராம்தேவ் சபதம்!

933
0
SHARE
Ad

ramdev-maggieமும்பை – இந்தியாவில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், மிக விரைவில் இந்திய அளவில் பதஞ்சலி முதலிடம் பிடிக்கும் என அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பை கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், “பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ் விரைவில் இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக மாறும். தற்போது, 100 டன்கள் வரையில் தயாரித்து வருகிறோம். விரைவில் 300 முதல் 500 டன்கள் வரை தயாரிப்பை அதிகரிக்க இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் இருந்து பணத்தை வெளியே எடுத்துக் கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை விட பதஞ்சலி அதிக வரவேற்பைப் பெறும்.”

patanjali (1)“குறைந்த விலையில் பலதரப்பட்டப் பொருட்களை அறிமுகப்படுத்துவதால் கொஞ்சம் கொஞ்சமாக நுகர்வோர் சந்தையில் பதஞ்சலி முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. இதில் கிடைக்கும் 100 சதவீத லாபமும், சமூக சேவைக்காகவே பயன்படுத்தப்படும். பன்னாட்டு நிறுவனங்களை விட குறைந்த செலவிலேயே நுகர்பொருட்களை பதஞ்சலி உற்பத்தி செய்கிறது. எனவே, பொருட்களின் விலையும் குறைவாகவே இருக்கும். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாபம் அனைத்தும் சமூக சேவை பணிகளுக்காகவே பயன்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.