Home Featured தமிழ் நாடு திமுக-அதிமுக கட்சிகளை எனக்குப் பிடிக்காது – விஜயகாந்த் பரபரப்புப் பேச்சு!

திமுக-அதிமுக கட்சிகளை எனக்குப் பிடிக்காது – விஜயகாந்த் பரபரப்புப் பேச்சு!

794
0
SHARE
Ad

vijayakanthசென்னை – “பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில், சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் முன் அறிவிப்பேன்” என்று தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பெரம்பலூரில் தேமுதிக தொண்டர்களை மத்தியில் அவர் ஆற்றிய உரையில், “ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்த ஜெயலலிதா ஓட்டு கேட்பது போல், வாக்காள பெருமக்களே என பேசினார். ஒரு இடத்தில் கூட காரில் இருந்து இறங்கி மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறவில்லை.”

“முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினாரே என்ன ஆனது? யாருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்ததா? எல்லாம் ஏமாற்று வேலை. விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை. ஏனென்றால் நாம் யாரிடமும் எதுவும் வாங்கவில்லை. நான் யாரை நம்பியும் இல்லை, தொண்டர்களை நம்பி தான் இருக்கிறேன்.”

#TamilSchoolmychoice

“திமுக, அதிமுக கட்சிகளை எனக்கு பிடிக்காது. தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்க, பத்திரிகையாளர்கள் வந்து இருக்கிறார்கள். அடுத்த மாதம் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. தேதியை பின்னர் அறிவிப்பேன். மாநாட்டில் தொண்டர்கள் முன் தான் கூட்டணி பற்றி அறிவிப்பேன். அதுவரை யாரிடமும் சொல்லமாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.