Home Featured இந்தியா சித்தூர் மேயர் அனுராதா படுகொலை: முன்விரோதம் தான் காரணமா?

சித்தூர் மேயர் அனுராதா படுகொலை: முன்விரோதம் தான் காரணமா?

613
0
SHARE
Ad

chittor moyar anuradhaசித்தூர் – சித்தூர் மேயர் அனுராதா நேற்று மர்ம நபர்களால் அவரது அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது கொலைக்கு, அவரது கணவருக்கு மீதுள்ள முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நேற்று கடுமையான கத்திக் குத்து காயத்திற்கு உள்ளாகி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மோகன், கடந்த சட்டமன்ற தேர்தலில் சித்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், மாநகராட்சி தேர்தலில் 50 வார்டுகளில் 36 – ஐ தெலுங்குதேசம் கட்சி கைப்பற்றியதால் அனுராதா மேயர் ஆனார்.

இந்நிலையில், மேயர் அனுராதாவின் கணவர் மீதுள்ள முன்விரோதம் காரணமாக இருவர் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதலைக் கண்டித்து சித்தூர் முழுவதும் இன்று கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.