Home Featured உலகம் சிங்கப்பூர் விமானத்தில் பெண் பணியாளரிடம் சில்மிஷம் – இந்திய நாட்டவருக்கு சிறை!

சிங்கப்பூர் விமானத்தில் பெண் பணியாளரிடம் சில்மிஷம் – இந்திய நாட்டவருக்கு சிறை!

605
0
SHARE
Ad

justiceசிங்கப்பூர் – கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த சில்க் ஏர் விமானத்தில் பயணி ஒருவர் பெண் பணியாளரிடம் சில்மிஷம் செய்த காரணத்தால், நேற்று அவருக்கு 9 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கும்கரா தாமஸ் அஜிஸ் (வயது 31) என்ற அந்த நபர், விமானத்தில் இருந்த 26 வயதான பெண் பணியாளரின் மார்பகத்தை வருடியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி அதிகாலை 1.15 மணியளவில் விமானம் புறப்பட்டவுடன், விமானத்தில் தரப்படும் மதுபானத்தை அளவுக்கு அதிகமாகக் கேட்டு வாங்கிக் குடித்த அந்த நபர், இன்னும் கூடுதலாக மதுபானம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதற்கு மறுப்புத் தெரிவித்த விமானப் பணியாளர்கள் அவரை இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

போதையில் தேவையான நேரங்களில் பாதுகாப்புப் பட்டை கூட அணியாமல் முரண்டு பிடித்த வந்த அவரிடம், பாதுகாப்புப் பட்டை அணியும் படி பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பணியாளர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த சமயத்தில், தனது இடத்திற்கு திரும்ப அப்பணியாளர் முயன்ற போது, அவரிடம் மேற்சொன்ன குற்றத்தை அந்த நபர் புரிந்தார் என நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.