Home Featured கலையுலகம் வாடிகன் சென்றார் நயன்தாரா: பிறந்தநாளன்று போப்பாண்டவரிடம் ஆசி!

வாடிகன் சென்றார் நயன்தாரா: பிறந்தநாளன்று போப்பாண்டவரிடம் ஆசி!

613
0
SHARE
Ad

nayantharaவாடிகன்- நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளன்று போப்பாண்டவரிடம் நேரடியாக ஆசி பெறும் நோக்கில் வாடிகன் நகர் சென்றிருக்கிறார்.

நயன்தாரா கடந்த புதன்கிழமையன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு 31 வயது முடிந்துள்ளது.

தற்போது நடிகர் மம்மூட்டியுடன் மலையாளப் படம் ஒன்றில் நடித்து வரும் அவர், சில தினங்களுக்கு முன்பே அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாக தகவல் வெளியானது.

#TamilSchoolmychoice

எனினும் அந்த நிகழ்வுக்குப் பின்னர் போப்பாண்டவரிடம் நேரில் ஆசி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதாம். இதையடுத்து கடந்த 13ஆம் தேதியே அவர் ரோமுக்கு பறந்துவிட்டார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடிகன் நகர் சென்ற நயன்தாரா, அங்கு போப்பாண்டவரிடம் தனது பிறந்தநாளையொட்டி ஆசி பெற்றுள்ளார்.

வெளிநாட்டுச் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு இம்மாதக் கடைசியில்தான் அவர் நாடு திரும்புகிறாராம். அதனாலென்ன! தங்களது கனவு தேவதைக்கு ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்கள் நட்பு ஊடகங்களின் வழி தங்களது பிறந்தநாள் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளனர்.