அதனைத் தொடர்ந்து ஆச்சார்யா கல்லூரி டாக்டர் அர்வின் மற்றும் அனைத்துலக மெகாடெக் கல்லூரியின் ஆலோசகர் டத்தோ டி. மோகன் ஆகியோர் உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து இந்த திட்டம் குறித்து கலந்துரையாடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் வழி தலை சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும். முறையான வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்த முடியும். ஒளிப்பதிவுத்துறை, எடிட்டிங் உள்ளிட்ட தொழில் நுட்பம் குறித்தவற்றை முறையாக பயில்வதன் வழி கலைஞர்களாக வருபவர்கள் தங்களது தரத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது சினிமா தொழிலாளர் சம்மேளனத்தலைவர் சிவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.