Home Featured தொழில் நுட்பம் உடனுக்குடன் குறுஞ்செய்தி வடிவில் தகவல்களைப் பெற புதிய செல்லியல் செயலி பதிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்!

உடனுக்குடன் குறுஞ்செய்தி வடிவில் தகவல்களைப் பெற புதிய செல்லியல் செயலி பதிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்!

1021
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215கோலாலம்பூர் –  ‘செல்லியல்’ 3.0 என உருவாகியுள்ள செல்பேசி செயலி தற்போது பல புதிய, நவீன தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே தங்களின் செல்பேசிகளில் செல்லியல் செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் தற்போது அதில் செய்திகள் கிடைப்பதில்லை என தொடர்ந்து நமக்குத் தெரிவித்து வருகின்றார்கள்.

பழைய செல்லியல் செயலிகளை தங்களின் செல்பேசிகளிலிருந்து அழித்து (delete) விட்டு, அதற்குப் பதிலாக புதிய வடிவிலான செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி, வாசகர்களும், தமிழ் ஆர்வலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பழைய செல்லியல் செயலிகளை நீங்கள் உங்கள் செல்பேசியிலிருந்து அழிக்காவிட்டால், புதிய செய்திகள் உடனுக்குடன் உங்களுக்குக் கிடைக்காது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஏற்கனவே நமது செல்லியலில் விரிவானதொரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

selliyal-image-300-x-200புதிய செய்திகள் சுடச்சுட, உடனுக்குடன், செல்லியல் செல்பேசி செயலிகளுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பப்படுகின்றது என்பதும் வாசகர்கள் அறிந்ததுதான். இத்தகைய வசதி இனி புதிய செல்லியல் 3.0 பதிப்புகளுக்கு மட்டுமே கிடைக்கும்படி புதிய தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட செல்லியலை  தங்களின் செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு புதிய செய்திகள், குறுஞ்செய்தி வடிவில் கிடைக்காது.

புதிய மேம்பாடுகள்

மலேசியாவிலிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே செல்பேசி குறுஞ்செயலியான ‘செல்லியல்’ தற்போது புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் பலவற்றுடன் 3.0 என்ற பதிப்புடன் வெளியீடு கண்டிருக்கின்றது.

செல்லியல் 3.0 என்ற இந்தப் பதிப்பை தற்போது அண்ட்ரோய்ட் பயனீட்டாளர்கள் பிளே ஸ்டோர் (Play store) இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்தின் அதிநவீன அம்சங்களை இணைத்துக் கொண்டு நமது செல்லியல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் இந்த செல்லியல் 3.0 பதிப்பை எப்ஸ்டோர் (App Store) என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய நவீன அம்சங்கள் என்ன?

Selliyal-Breaking-News-3-512செல்லியல் செல்பேசி செயலியை, தற்போது உலகத் தரத்தில் வெளிவரும் மற்ற ஆங்கில செயலிகளுக்கு நிகராக, அதி நவீன அம்சங்களுடன், செல்லியலின் தோற்றுநரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் மேம்படுத்தியுள்ளார்.

முதலாவதாக, செல்லியல் செய்திகள் தற்போது இரண்டு செய்தி வட்டங்களாக தரம் பிரிக்கப்பட்டுள்ளன. நமது வாசகர்களில் அதிகமானோர், மலேசிய செய்திகளையும், தமிழக செய்திகளையும் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை ஆய்வுகளின் மூலம் கவனத்தில் கொண்டு, இந்த பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மலேசிய செய்தி வட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு மலேசிய செய்திகள் பிரிவு, முதல் பக்கமாக உங்கள் செயலியில் தோற்றம் தரும். அதே வேளையில் தமிழ் நாட்டு வாசகர்களும், தமிழ் நாட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களும் தமிழ் நாடு செய்தி வட்டத்தைத் தேர்ந்தெடுத்தால் அவர்களின் செல்பேசி செயலியில் தமிழ்நாட்டுச் செய்திகள் முதல் பக்கமாக திரையில் தோற்றம் தரும்.

குறுஞ்செய்தியாக உடனுக்குடன் தகவல்கள்

செல்லியல் குறுஞ்செயலி தகவல் தளத்திலிருந்து அனுப்பப்படும் செய்தி அறிவிக்கைகள் உடனடியாக பயனர்களின் செல்பேசிகளில் குறுஞ்செய்தியாக திரையில் தோன்றும் தொழில் நுட்பத்தை செல்லியல் கொண்டிருக்கின்றது என்பது வாசகர்கள் அறிந்ததே.

இனி இந்தத் தொழில் நுட்பத்தை,  புதிய செல்லியல் 3.0 பதிப்பை பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் மட்டுமே பெறவும், அனுபவிக்கவும் முடியும் என்பதால் வாசகர்கள் அனைவரும் புதிய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

எந்த நேரத்தில் செய்தி அறிவிக்கைகள் அனுப்பப்பட வேண்டும் என்பதையும் இனி நீங்களே தேர்ந்தெடுக்கலாம்

இனி செல்லியல் மூலமாக, புதிய செய்தி அறிவிக்கைகள், உடனுக்குடன் உங்களின் செல்பேசிகளுக்கு 24 மணி நேரமும் அனுப்பப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, வாசகர்கள் வசதிக்காக மூன்று விதத் தேர்வுகளாக, இந்த குறுஞ் செய்தி அறிவிக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதலாவதாக உங்களுக்கு வேண்டுமென்றால் 24 மணி நேரமும் குறுஞ்செய்திகள் உங்களுக்கு வந்து சேரும் வண்ணம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது, காலை 8.00 மணி முதல், இரவு 8.00 மணி வரை மட்டுமே குறுஞ்செய்தி அறிவிக்கைகள் அனுப்பப்பட வேண்டும் என நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது குறுஞ்செய்திகளாக,  செய்தி அறிவிக்கைகள் உடனுக்குடன் அனுப்பப்படும் வசதி வேண்டாம் என்ற தேர்வையும் விரும்பினால் வாசகர்கள் செய்து கொள்ளலாம்.

விளம்பரங்களின்றி செய்திகளைப் படிக்கும் வசதி

செல்லியல் செய்திகளை விளம்பரங்களின் இடையூறுகள் இன்றி படிக்க விரும்புபவர்கள் ஒரு சிறிய தொகையை ஆண்டுச் சந்தாவாகச் செலுத்துவதன் மூலம், அவர்களின் செயலிகளில் விளம்பரங்களின்றி செய்திகளை மட்டுமே படிக்கும்படியான அம்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தாக் கட்டணைங்களை புதிய செல்லியல் 3.0 பதிப்பில் சந்தா பிரிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இலகுவான, சுமுகமான பயன்பாடுகள்

வாசகர்கள் செய்திகளைப் பிரிவுகளாக, விரல்களால் நகர்த்தி மிகவும் இலகுவாகவும், சுமுகமாவும் பார்த்துப் படித்துக்கொள்ளும் வண்ணம் பயனர் இடைமுகங்கள் புதிய செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செல்லியல் தகவல் ஊடகச் செயலி குறித்து எங்களுக்குக் கிடைத்த கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் புதிய மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

வாருங்கள்!

உடனடியாகப் செல்லியல் புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு, இந்த அதிநவீன செல்பேசி குறுஞ்செயலித் தளத்தின் மூலம் தமிழில் செய்திகளை உடனுக்குடன் படித்துத் தெரிந்து கொள்ளும் புதிய பயன்பாட்டு அனுபவத்தைப் பெறுங்கள்!

-செல்லியல் ஆசிரியர் – தொழில்நுட்பக் குழு