Home Featured நாடு “21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கே” – மோடி எழுச்சி உரை

“21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கே” – மோடி எழுச்சி உரை

1183
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “ஆசியாவின் எழுச்சிக்குத் தேவையானவற்றை ஆசியானைச் சேர்ந்த நாடுகள் அளித்துவருகின்றன. தற்போது 21-ம் நூற்றாண்டை ஆசியான் நூற்றாண்டாக மாற்ற இந்தியாவுக்கான காலம் வந்திருக்கிறது” என மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உரையில் தெரிவித்தார்.

narendra_modi--621x414--621x414

(கோப்புப் படம்)

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

அதில் மோடி உரையாற்றும் போது “இந்தியா மற்றும் ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டணி) இயற்கையாகவே பங்காளிகள். பண்டைய காலங்களில் இருந்து எங்கள் உறவு நீடித்து வருகின்றது” என்றார்.

“21 ஆம் நூற்றாண்டு ஆசியாவிற்குச் சொந்தமானது என்று கூறுகிறேன். நான் இதைச் சொல்வதற்கான காரணம் ஏனென்றால், ஆசிய நாடுகளின் வளர்ச்சிப் பாதைகள் அவ்வாறு உள்ளன” என்று மோடி கூறியதும் அரங்கில் உரத்த கைத்தட்டல் எழுந்துள்ளது.