Home Featured நாடு மலேசியா வந்தார் மோடி – டாக்டர் சுப்ரா அவரை வரவேற்றார்!

மலேசியா வந்தார் மோடி – டாக்டர் சுப்ரா அவரை வரவேற்றார்!

943
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று அதிகாலை மலேசியாவிற்கு வருகை புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா-வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்.எஸ்.சுப்ரமணியம், உடன் வரும் அமைச்சர் என்ற முறையில் விமான நிலையத்தில் வரவேற்றார்.

Narendra Modi-KL-Subra receives

மோடியை வரவேற்கும் டாக்டர் சுப்ரா மற்றும் மலேசியாவிற்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி

#TamilSchoolmychoice

இன்று அதிகாலை 6.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு மோடியின் அதிகாரப்பூர்வ விமானம் வந்தடைந்தது.

இன்று நடைபெறும் 27-வது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி, மூன்று நாட்களுக்கு மலேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.