Home Featured உலகம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

593
0
SHARE
Ad

சிங்கப்பூர்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஹாங்காங் வழியாக சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூர் வந்த அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தரையிறங்கியது.

Singapore_Airlines_Boeing_777-200சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (கோப்புப் படம்)

எனினும் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து அதிலிருந்த பயணிகள் உடனடியாக தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பிறகே விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறினர்.

#TamilSchoolmychoice

இதையடுத்து பயணிகளின் உடைமைகளையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தவிர, பயணிகளிடமும் வழக்கத்தைவிட மிக தீவிரமாக பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட மிரட்டல் எவ்வாறு, யாரால் விடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

மிரட்டலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையில் விமானத்திலோ, பயணிகளிடமோ சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் துருக்கியில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அது கனடாவுக்கு திசைதிருப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.