Home Featured நாடு யோகாவும் மோடியும் – புத்துணர்ச்சி இரகசியம்!

யோகாவும் மோடியும் – புத்துணர்ச்சி இரகசியம்!

915
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரண்டு நாட்களாக நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார்.

உறக்கத்திற்கு நேரம் ஒதுக்குகின்றாரா? என்று எண்ணும் அளவிற்கு அவருக்கு அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள் உள்ளன.

என்றாலும், அவரை நேரில் பார்க்கும் போது அவ்வளவு சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியோடும் தெரிகின்றார். அதற்கு அவர் நாள்தோறும் தவறாமல் செய்து வரும் யோகாவும் காரணம் என்று கூறப்படுகின்றது.

????????????????????????????????????
(இடமிருந்து: நிஷா பெரியசாமி, ஸ்ரீஅஜயகுமார் ஆகியோரிடமிருந்து புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் நரேந்திரமோடி)
#TamilSchoolmychoice

யோகாவையும், அதன் சிறப்புகளையும் நன்கு உணர்ந்தவர் மோடி என்பதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘உலக யோகா தினத்தை’ அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இராமகிருஷ்ணா மிஷனில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்க வருகை புரிந்த மோடி, அந்நிகழ்விலேயே, மலேசியாவிற்கான இந்தியத் தூதரகத்தின், இந்தியக் கலாச்சார மையத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஸ்ரீ அஜய குமார் ஷாஹூ எழுதிய ‘புனிதமான ஆரோக்கியத்திற்கு யோகா’ (YOGA FOR HOLISTIC HEALTH) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

ஆங்கிலம் மற்றும் மலாய் என இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள அப்புத்தகத்தை, மலாய் மொழியில் மொழிபெயர்த்திருப்பவர் மலேசியாவின் முன்னணி பத்திரிக்கையாளரான நிஷா பெரியசாமி.

நேற்று, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அப்புத்தகமும், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய ஆவணப்படத்தின் குறுந்தட்டும் வழங்கப்பட்டது.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்