Home Featured நாடு எம்எச் 370: தேடுதல் நடவடிக்கைக்காக சீனா 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளது – லியோவ்

எம்எச் 370: தேடுதல் நடவடிக்கைக்காக சீனா 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளது – லியோவ்

587
0
SHARE
Ad

Liow-Tiong-Lai-2கோலாலம்பூர் – மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக சீனா இதுவரை 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.

இதற்காக சீன அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
“சீனாவின் இந்தப் பங்களிப்பு மாயமான விமானத்தை தேடும் பணியில் மலேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வெகுவாக உதவும் என்பதில் சந்தேகமில்லை” என்று லியோவ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014, மார்ச் 8ஆம் தேதி மாயமான அந்த போயிங் 777 ரக விமானத்தை தேடும் நடவடிக்கையில் கைகொடுத்த ஆசியான் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“மலேசியாவுக்கு உதவி தேவைப்பட்ட தருணத்தில், அந்த நாடுகள் அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாத ஒன்று. அந்த நாடுகளுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான உறவுக்கு இந்த உதவி சிறந்த சான்றாக உள்ளது.

“கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தபடி, விமானத்தை தேடும் நடவடிக்கையில் மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நாடுகளும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது, தேடுதல் மற்றும் மீட்புக் குழுவுக்கு சவாலான பணியாக உள்ள போதிலும், நடவடிக்கை தொடரும். மலேசியாவுக்கு சோதனையாக அமைந்த இந்தக் காலக்கட்டத்தில் சீனா, ஆஸ்திரேலிய அரசுகள் அளித்து வரும் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று லியோவ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.