Home Featured நாடு மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் மோடி சந்திப்பு!

மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் மோடி சந்திப்பு!

668
0
SHARE
Ad

Modi-subra-meeting-MIC-CWCகோலாலம்பூர் – நேற்று இந்திய வம்சாவளியினருடான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வருகையின் ஒரு பகுதியாக, மலேசிய இந்தியர் காங்கிரசின் (மஇகா) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களைச் சந்தித்து அரசியல் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

Modi-MIC CWC--KLசுப்ராவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் மோடி – கவனிப்பவர்கள், மத்திய செயலவை உறுப்பினர் வேள்பாரி, உதவித் தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங், இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ்…

இந்த சந்திப்புக் கூட்டத்தின்போது மலேசியாவிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் சில தொழில்நுட்ப வசதிகளை செய்து தர மோடி உறுதியளித்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

Modi-CWC-group-photoநினைவுக்காக…மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் மோடியின் குழுப்படம் 

-செல்லியல் தொகுப்பு