Home உலகம் மெல்பர்னில் மீண்டுமொரு வழக்கத்திற்கு மாறான மிகக் கடுமையான வெப்பநிலை

மெல்பர்னில் மீண்டுமொரு வழக்கத்திற்கு மாறான மிகக் கடுமையான வெப்பநிலை

536
0
SHARE
Ad

Melbourne-location-map-sliderமெல்பர்ன், மார்ச் 13 –  ஆஸ்திரேலியாவின்  மெல்பர்ன் நகர்  தனது முந்தைய வெப்ப அளவு பதிவை மிஞ்சும் விதமாக இடைவிடாமல் தொடர்ந்து ஏழு மிக வெம்மையான இரவுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 30 செல்சியர்ஸுக்கு மேல் பகல் நேர  தகிக்கும் வெப்பத்தை அனுபவித்த மெல்பர்ன் நகரவாசிகள் இப்போது இந்த அதிகப்படியான வெப்பத்தால் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர்.

2008 மற்றும் 2009ல் இரு முறை 20 செல்சியர்ஸ் இரவு நேர உச்ச வெப்ப அளவுகளாக பதிவாகியிருந்தாலும், அவை 6 நாட்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் இப்போது 7 தொடர் இரவுகள் அவ்வெப்பநிலை மையம் கொண்டிருப்பதாக வானிலை மையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர் ரோட் டிக்ஸன் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மார்ச் மாதம் முடிய இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில் கடந்த இரு வாரங்களின் சராசரி 32.5 ஆக இருந்து இதுவரை இல்லாத நிலையில் மார்ச் மாதத்தில் உயர்ந்த வெப்ப நிலை பதிவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இறுதி நிலவரப்படி காலை 9.30மணியளவில் 23 செல்சியர்ஸுக்கு வெப்பநிலை குறைந்தாலும், இந்த மாற்றம் புதன் வரை வடகிழக்குப் பகுதிக்கு பொருந்தாது என்று அவர் தெரிவித்தார்.