லகாட் டத்து, மார்ச் 13 – சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று காலை லகாட் டத்துவில் ‘ஓப்ஸ் டவுலத்’ நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அது பற்றி ஹம்சா கூறுகையில், ”அஜிமுடி கிராமும் மற்றும் அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் பதுங்கி இருக்க வேண்டும். காரணம் எந்த ஒரு தலைவரும் தனது படைகளை தனியாக விட்டு ஓட மாட்டார். அவர்கள் தான் அப்படையினரை வழி நடத்திச் செல்ல வேண்டும். எனவே அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.