Home Featured நாடு மொராயிசின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது!

மொராயிசின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது!

768
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – கொலை செய்யப்பட்ட அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை நேற்று அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்யாமல் சடலத்தை வாங்க மாட்டோம் என்று இத்தனை நாட்களாக அவரது குடும்பத்தினர் கூறி வந்ததால், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி முதல், மொராயிசின் சடலம் கோலாலம்பூர் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் மொராயிசின் குடும்பத்தினரிடம் மொராயிசின் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக செந்துல் ஓசிபிடி துணை ஆணையர் ஆர்.முனுசாமி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice