Home Featured நாடு நஜிப்புக்கு எதிராகத் திரும்பியிருக்கும் 81 ஜோகூர் அம்னோ கிளைகள்!

நஜிப்புக்கு எதிராகத் திரும்பியிருக்கும் 81 ஜோகூர் அம்னோ கிளைகள்!

535
0
SHARE
Ad

NAJIBஜோகூர் – ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த 81 கிளைகள் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தாங்கள் இம்முடிவை எடுத்ததற்கு யாரும் தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அக்கிளைகளின் சார்பில் சைனுடின் ஹமிட் என்பவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “அப்படிக் கூறுபவர்கள் அடிப்படை ஆதாரமற்ற மற்றும் பொறுப்பில்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது எங்களின் சொந்தப் போராட்டம்”

#TamilSchoolmychoice

“நாங்கள் மலாய்காரர்களையும், மலேசியாவையும் தக்க வைக்கும் நோக்கில் தொடர்ந்து முயற்சி செய்வோம்” என்று நேற்று இரவு தெரிவித்துள்ளார்.

கட்சியைக் களங்கப்படுத்திவிட்டார் என்று கூறி நஜிப்புக்கு எதிராக, ஜோகூரைச் சேர்ந்த 81 அம்னோ கிளைத் தலைவர்கள் ஒன்று திரண்டு குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.