Home Featured கலையுலகம் “இந்தியாவை விட்டு வெளியேறலாமா?” – மனைவியுடன் ஆலோசித்த அமீர்கான்!

“இந்தியாவை விட்டு வெளியேறலாமா?” – மனைவியுடன் ஆலோசித்த அமீர்கான்!

907
0
SHARE
Ad

aamir_kiranபுது டெல்லி – பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரும், ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவருமான அமீர்கான், இந்தியாவில் மதசகிப்புத்தன்மையின்மை குறித்து முதல் முறையாக தனது கருத்தினை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஷாருக்கானை தொடர்ந்து அமீர்கானும் இது தொடர்பாக பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய அமீர்கான், “படைப்பாளிகளும், விஞ்ஞானிகளும் மதசகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக் கொடுக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பை பெறுவதற்கு அவர்கள் கையாளும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று”

“தனிப்பட்ட முறையில் இந்த நாட்டின் குடிமகனாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சம்பவங்களும், செய்தித்தாள்கள் மூலமாக நான் தெரிந்து கொள்ளும் விஷயங்களும் என்னுள் எச்சரிக்கை மணியை அடிக்கின்றன. இதனை நான் மறுக்க முடியாது. நான் பல்வேறு சம்பவங்களில் அதனை உணர்ந்துள்ளேன்.”

#TamilSchoolmychoice

“இது தொடர்பாக நான் கிரனிடம் (அமீரின் மனைவி) உரையாடுகையில், அவர் ‘நாம் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா?’ என்று கேட்டார். கிரனிடமிருந்து வந்த இந்த கேள்வி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால், அவள் எங்கள் குழந்தைகளுக்காக பயப்படுகிறாள். சுற்றி நடக்கும் சம்பவங்களும், சூழலும் அச்சம் அடைய வைக்கின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமீர்கானின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.