Home Featured கலையுலகம் அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார் வைரமுத்து!

அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார் வைரமுத்து!

481
0
SHARE
Ad

vairamuthu_2007064gசென்னை – நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக போத்ரா என்பவர் கவிஞர் வைரமுத்து மீது தொடுத்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து நேரில் ஆஜரானார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வைரமுத்து மீதான அவதூறு வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.