Home Featured உலகம் டாலர், பவுண்ட் போன்று இந்திய ரூபாய் பத்திரங்கள் வெளியிடப்படும் – மோடி தகவல்

டாலர், பவுண்ட் போன்று இந்திய ரூபாய் பத்திரங்கள் வெளியிடப்படும் – மோடி தகவல்

520
0
SHARE
Ad

Modi-Singapore Indians-speechசிங்கப்பூர்- டாலர், பவுண்ட் வரிசையில் இந்திய ரூபாய் பத்திரங்கள் விரைவில் வெளியிடப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்திய பொருளாதாரத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார்.

இனி உலகிலுள்ள எவரும் இந்திய ரூபாய் பத்திரத்தில் முதலீடு செய்யலாம் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்ட சில நாடுகளில் இந்திய ரூபாய் பத்திரங்களை வெளியிட இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“இந்திய அரசின் இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண மதிப்பு மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. முன்பெல்லாம், டாலர், பவுண்ட், தங்கம் மட்டுமே மதிப்புக்குரியதாக கருதப்பட்டன. இனி இந்திய ரூபாயும் அப்படிப்பட்ட மதிப்பு கொண்டதாக உருமாறும்.
“எனினும் மோடி என்ன செய்தார் என அறியாமல் கேள்வி கேட்கும் இந்தியர்கள்தான் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு இந்தத் திட்டம் புதிய விவாதத்தைக் கிளப்பிவிடும் என நம்புகிறேன்” என்றார் மோடி.

இந்திய பணியாளர்களின் திறனை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் பொருட்டு சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.