Home Featured உலகம் “சிங்கப்பூரிடம் இருந்து இந்தியா நிறைய கற்றுக் கொள்ளலாம்” – நரேந்திர மோடி

“சிங்கப்பூரிடம் இருந்து இந்தியா நிறைய கற்றுக் கொள்ளலாம்” – நரேந்திர மோடி

474
0
SHARE
Ad

Modi-Lee Hsien Loong-Selfie-Singaporeசிங்கப்பூர்- சிங்கப்பூர் என்ற சிறிய நாட்டிடம் இருந்து இந்தியா பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும், அதில் முக்கியமானது சுத்தத்தைப் பேணிக் காப்பது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு வசிக்கும் இந்தியர்கள் திரளாகப் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் கூறினார்.

“மகாத்மா காந்தியிடம் சுத்தமா, சுதந்திரமா என்று கேட்டபோது, சுத்தத்திற்குதான் முன்னுரிமை தருவேன் என்று கூறியிருந்தார். இந்தியர்களும் தற்போது சிங்கப்பூர் போலவே சுத்தத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். எனவே ‘கிளீன் இந்தியா’ திட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது” என்றார் மோடி.

#TamilSchoolmychoice

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டின் பெருமையை உலகெங்கிலும் பறைசாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் எனும் தத்துவத்தையே இந்தியா தனது வாழ்வியல் நெறிமுறையாகக் கொண்டுள்ளது என்றார்.

சகிப்புத்தன்மை இல்லாத செயல்களுக்கு இனி இந்தியாவில் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் பாஜக அரசு அமைந்த பின்னர் நேரடி அன்னிய முதலீடு சீராக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியர்கள் முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர் என்றார்.

“இந்தியாவும், சிங்கப்பூரும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற முடியும். இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளில் சிங்கப்பூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. நம் கண்முன்னே அதிவேகமாக வளர்ந்த ஒரு நாடு சிங்கப்பூர்” என்று பாராட்டு தெரிவித்தார் மோடி.

முதலீடு செய்ய எளிமையான நாடுகள் என்று உலக வங்கி தயாரித்த பட்டியலில் இந்தியா தற்போது 12 இடங்கள் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் 40 விழுக்காடு அளவு வளர்ச்சி பெற்றுள்ளதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

“மாற்றம் நாட்டு மக்களிடமிருந்தே வர வேண்டும். எந்த ஒரு மாற்றமும் அரசுகளால் வந்தது கிடையாது, மக்களால்தான் வர வேண்டும். கடந்த காலத்தில் இந்திய பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள் அனைத்தும் ஊழல் கறை படிந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகின. ஆனால் கடந்த 18 மாத பாரதிய ஜனதா ஆட்சியில், எங்கள் அரசை நோக்கி ஒரு விரலைக் கூட நீட்டி குறை கூற முடியவில்லை. ஏனெனில் அனைத்துமே வெளிப்படையாக நடந்த ஒப்பந்தங்களாகும்.

“எனவேதான் 19 விழுக்காடு அளவிற்கான அன்னிய நேரடி முதலீட்டை பாதுகாப்பு துறையில் அனுமதிக்க முடிவு செய்தோம். அதேபோல் ரயில்வே துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்” என்று மோடி மேலும் கூறினார்.