Home Featured நாடு நாடாளுமன்றத்தில் ‘கத்தரிக்கோல் சாலட்’ பரிமாறப்பட்ட கதை தெரியுமோ?

நாடாளுமன்றத்தில் ‘கத்தரிக்கோல் சாலட்’ பரிமாறப்பட்ட கதை தெரியுமோ?

806
0
SHARE
Ad

saladகோலாலம்பூர் – நல்லவேளையாக உலகத் தலைவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே மலேசியாவில் இருந்து கிளம்பிவிட்டார்கள். கடந்த திங்கட்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உணவுப் பட்டியல் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தால் மிரண்டிருப்பார்கள்.

காரணம், அப்பட்டியலில் முதல் உணவாக ‘Scissors Salad’ என்று எழுதப்பட்டிருந்தது. ‘Caesar Salad’ என்று எழுதுவதற்குப் பதிலாக அதில் தவறுதலாக ‘கத்தரிக்கோல் சாலட்’ என்று பொருள் தரும் வகையில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டனர்.

அவ்வளவு தான், இந்தத் தகவல் நாடாளுமன்றத்தில் இருந்து காட்டுத் தீயெனப் பரவி ‘பிட்சா ஹட்’ டுவிட்டர் பக்கம் வரை சென்று, “எங்களிடம் ‘Scissors Salad’ இல்லை.ஆனால் ‘Caesar Salad’ உண்டு என்று அவர்கள் எழுதிப் போட்டு புத்திசாலித்தனமாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விட்டனர்.

#TamilSchoolmychoice

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், உண்மையாகவே கத்தரிக்கோல் வடிவில் வெட்டப்பட்ட கீரைகளைக் கொண்டு சாலட் ஒன்றை அமைத்து அப்புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்தார்.

கேட்கவா வேண்டும்? இப்போது நட்பு ஊடகங்களில் ‘Scissors Salad’ தான் வைரல்..

Salad 1

உலகத்திலேயே மலேசியாவில் தான் இப்படிப்பட்ட ஒரு உணவு கண்டுபிடிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்போது வேடிக்கையாகக் கூறி வருகின்றனர்.

இதனிடையே, கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், நாட்டில் ஆங்கிலப் புலமை எவ்வாறு உள்ளது என்பதற்கு இவ்விவகாரம் ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகர் அமின் மூலியாவை யாரும் கூரான ஆயுதம் கொண்டு கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்களா?” என்றும் கிண்டலாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம், ஒபாமா வருகையின் போது போக்குவரத்துத் தகவல் பெட்டி ஒன்றில் அவரை வரவேற்க எழுதப்பட்ட வாசகத்தில் இருந்த பிழை அனைவராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: செல்லியல்