Home Featured இந்தியா மனைவி, குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார் அமீர்கான்!

மனைவி, குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார் அமீர்கான்!

555
0
SHARE
Ad

amirமும்பை – தான் கூறிய கருத்துக்கு தற்போது நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருவதால், தனது மனைவியும் குழந்தைகளையும் மும்பையில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்று கருதிய அமீர்கான் அவரை பாதுகாப்பாக இடத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

அமீர்கானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, மும்பையில் உள்ள அமீர்கான் வீட்டுக்கு முன் இந்துத்துவ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரது உருவ பொம்மையையும் பாஜகா தொண்டர்கள் எரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகர் அமீர்கான், நாட்டில் மத சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துக் கொண்டே வருவதால், வேறு நாட்டில் குடியேறலாம் என தனது மனைவி தன்னிடம் கேட்டு கொண்டார் என்று அமீர்கான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.