Home Featured இந்தியா “நான் தேச விரோதியா?” – அமீர்கான் உருக்கம்!

“நான் தேச விரோதியா?” – அமீர்கான் உருக்கம்!

670
0
SHARE
Ad

amirமும்பை – “மத சகிப்புத்தன்மை பற்றி நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். என்னை தேச விரோதி என்று விமர்சிப்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று நடிகர் அமீர்கான் இன்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அமீர்கான், விருது வழங்கும் விழா ஒன்றில், “இந்தியாவில் மதசகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு ஏராளான உதாரணங்கள் தினசரிகளில் நாம் பார்க்கிறோம். அதனால் அச்சம் அடைந்த எனது மனைவி நாம் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா? என்று கேட்கிறார்” என பொது வெளியில் கூற, நாடெங்கிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பலரும் அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், அவர் இன்று பேட்டி ஒன்றில், “நான் கூறிய அனைத்து விஷயங்களிலும் உறுதியாக இருக்கிறேன். எனது மனதில் பட்டதை நான் கூறியதற்கு எனக்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், நான் கூறியதை உறுதிபடுத்துகின்றனர். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நானோ எனது மனைவியோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணமில்லை. எதிர்காலத்திலும் அதனை செய்யமாட்டோம்.”

#TamilSchoolmychoice

“எனக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் ஒன்று எனது பேட்டியை முழுவதுமாக பார்த்து இருக்க மாட்டார்கள் அல்லது வேண்டுமென்றே எனது கருத்தை திரித்து கூற முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். இந்தியா எனது நாடு. என் நாட்டை நேசிக்கிறேன். இங்கு பிறந்ததற்காக, இங்கு வாழ்வதற்காக நான் பெருமை கொள்கிறேன்.”

“என்னை தேச விரோதி என அழைப்பவர்களுக்கு நான் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன், ஒரு இந்தியனாக நான் பெருமை கொள்கிறேன். அதற்காக எனக்கு யாரின் அனுமதியும் தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.