Home Featured நாடு ஜன 1 முதல் எக்ஸ்பிரஸ் இரயிலில் கேஎல்ஐஏ செல்ல 55 ரிங்கிட்!

ஜன 1 முதல் எக்ஸ்பிரஸ் இரயிலில் கேஎல்ஐஏ செல்ல 55 ரிங்கிட்!

902
0
SHARE
Ad

Express_Rail_Link_trainகோலாலம்பூர் – கேஎல் செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கேஎல்ஐஏ) அதிவேக இரயில் இணைப்பு (Express Rail Link ) வழியாகச் செல்லும் பயணிகள், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தற்போதைய விலையை விடக் கூடுதலாக 20 ரிங்கிட் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று எக்ஸ்பிரஸ் இரயில் லிங்க் செண்ட்ரியான் பெர்ஹாட் வெளியிட்ட அறிக்கையில், கேஎல் செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கேஎல்ஐஏ / கேஎல்ஐஏ 2 -வுக்குச் செல்லும் பயணிகள், ஒரு வழிப் பாதைக்கு புதிய விலையாக 55 ரிங்கிட் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய விலை நிர்ணயத்திற்கு, தரை பொதுப்போக்குவரத்து சட்டம் 2010 பிரிவு 120-கீழ் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice