Home Featured உலகம் சிங்கப்பூரில் புதிய மால்வேர்: திறன்பேசி வழியே பல டாலர்கள் மோசடி!

சிங்கப்பூரில் புதிய மால்வேர்: திறன்பேசி வழியே பல டாலர்கள் மோசடி!

866
0
SHARE
Ad

Smart phoneசிங்கப்பூர் – அண்ட்ராய்டு திறன்பேசிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து புதிய மால்வேர் (வைரஸ்) ஒன்று முடுக்கிவிடப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் வங்கிகளின் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று வங்கிகளின் சங்கத் தலைவர் ஓங் ஆங் அலி பூன் கூறுகையில், கடந்த செப்டம்பர் முதல் இந்த புதிய மால்வேர் மோசடியில் 50 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்ட்ராய்டு இயங்குதளம் அல்லது வாட்சாப் செயலி மூலமாக திறன்பேசிகளின் உள்ளே வரும் இந்த மால்வேர், வாடிக்கையாளர்களின் இணைய வழி வங்கிச் சேவையில் இருந்து டாலர்களை தானாக மற்ற வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் சில ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களை இழந்துள்ளனர் என்றும் ஆங் குறிப்பிட்டுள்ளார்.

மலிவு விலை விமானச் சேவை என்ற பெயரில் விளம்பரம் போல் வரும் இந்த மால்வேர்கள், வாடிக்கையாளர்கள் அந்த இணைப்பில் சென்றவுடன் அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் விவரங்களை திருடிக் கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ஆங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

படம்: யாஹூ