Home நாடு சபா ஆர்.சி.ஐ விசாரணை 6 மாதத்திற்கு நீட்டிப்பு

சபா ஆர்.சி.ஐ விசாரணை 6 மாதத்திற்கு நீட்டிப்பு

692
0
SHARE
Ad

mole-RCI-SABAH-2சபா, மார்ச் 13 – சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான அரச ஆணைய விசாரணை (ஆர்.சி.ஐ)  விசாரணை வரும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆர்சிஐ செயலாளர் ஷரிபுதீன் காசிம் கூறுகையில், ”இந்த ஆர்.சி.ஐ விசாரணையை முழுமையாக முடிக்கவும், அறிக்கை தயார் செய்யவும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார். முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் ஷிம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய விசாராணைக் குழுவிடம் எட்டு வகையான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவைகளில் நீல நிற அடையாள அட்டை வைத்திருக்கும் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, சட்டத்திற்கு உட்பட்டு தான் அவை அவர்களுக்கு கொடுக்கப்பட்டதா, அப்படி நீல நிற அட்டையை பெற்ற அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா? போன்ற விசாரணைகள் அடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இக்குழு திடீரென அதிகரிக்கும் சபாவின் மக்கள் தொகை பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றது.

இதற்கிடையில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், இந்த நேரத்தில் இந்த அரச ஆணையத்தின் விசாரணகளிலிருந்து எதிர்மறையான தகவல்கள் வெளியாகத் தொடங்கினால் அதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தேசிய முன்னணியின் தோற்றம் மேலும் பாதிப்படையும் என்ற அச்சத்தினால் இந்த ஒத்தி வைப்பு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகின்றது.