Home Featured தமிழ் நாடு தமிழகத்திற்கு மேலும் கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி உதவி!

தமிழகத்திற்கு மேலும் கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி உதவி!

860
0
SHARE
Ad

சென்னை – இன்று சென்னை வெள்ள நிலவரத்தை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ரோசய்யாவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வரவேற்றனர்.

Modi-in Chennai-tocheck flood-Jayalalithaa-Air baseதமிழகத்துக்கான நிவாரண உதவிகளை அறிவிக்கும் நரேந்திர மோடி – அவருக்கு இடது புறத்தில் ரோசய்யா – வலது புறத்தில் ஜெயலலிதா…

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மோடி, கடும் மழை காரணமாக துயரத்தில் ஆழ்ந்துள்ள சென்னை மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதாகவும், உடனடியாக 1,000 கோடி ரூபாய் நிதி உதவியை நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் என்றும் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 940 கோடி ரூபாய் தவிர்த்து மேலும் கூடுதலாக வழங்கப்படுகின்றது என்றும் மோடி கூறினார்.

சென்னையில் வெள்ள நிலவரங்களைத் தான் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.