Home Featured நாடு அன்வாருக்கு 800,000 ரிங்கிட் வழங்க பபகொமோவுக்கு உத்தரவு!

அன்வாருக்கு 800,000 ரிங்கிட் வழங்க பபகொமோவுக்கு உத்தரவு!

604
0
SHARE
Ad

papagomo2கோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு 800,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டுமென சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோ (எ) வான் முகமட் அஸ்ரி வான் டெரிசுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பபகொமோ தாக்கல் செய்திருந்த மேல்முறையீடை இன்று நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரோஹானா யூசோப் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு, பபகொமோ என்ற பெயரில் உள்ளவரும், வான் முகமட் அஸ்ரி என்பவரும் ஒரே ஆள் தான் என்ற கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் முடிவில் உண்மை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice