Home Featured நாடு ஜோகூர் இளவரசர் துங்கு ஜாலில் புற்றுநோயால் மரணம்!

ஜோகூர் இளவரசர் துங்கு ஜாலில் புற்றுநோயால் மரணம்!

1089
0
SHARE
Ad

johorஜோகூர் பாரு – கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ஜாலில் இப்னி சுல்தான் இப்ராகிம் (வயது 25), இன்று மாலை 7.11 மணியளவில் ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரது கடைசி மூச்சின் போது ஜோகூர் அரச குடும்பத்தினர் அனைவரும் அவருடன் இருந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில் விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றவரான துங்கு ஜாலில், சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 1 வருடமும், லண்டன் மிருகக்காட்சி சாலையில் இரண்டு வருடங்களும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (The Star)