கோலாலம்பூர் – ஆடை விவகாரத்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட டாமாய் சேவை மருத்துவமனை தாதி நசியா சௌனி சமட், தான் இந்த விவகாரம் தொடர்பில் வழக்கை எதிர்கொள்ளவும் தயார் என்கிறார்.
மருத்துவமனை விதிமுறைகளின் படி, இஸ்லாமின் கண்ணியத்தைக் குறிக்கும் ஆடையுடன் (aurat) கூடிய சீருடையை அணிய மறுத்ததால், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக நசியா குறிப்பிட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையோ அவர் மீது ஒழுக்கப் பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
“நான் வழக்கை எதிர்கொள்ளத் தயார். நான் பயப்படவில்லை காரணம் நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும். தவறு செய்யவில்லை என்றும் எனக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
24 வயதான அந்த தாதி, தனது முன்னாள் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
படம்: நன்றி (Malaysiakini)