Home தமிழ் நாடு “அரசு ஓரளவிற்கு தற்போது பாதிக்கப்பட்டவர்களை திருப்திபடுத்துகிறது” – கருணாநிதி

“அரசு ஓரளவிற்கு தற்போது பாதிக்கப்பட்டவர்களை திருப்திபடுத்துகிறது” – கருணாநிதி

522
0
SHARE
Ad
karunanithi

சென்னை – ”தமிழக அரசு சார்பில் மீட்புப் பணிகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதா? என்பது குறித்து, இந்த நேரத்தில் நான், அரசை குறை கூற விரும்பவில்லை,” என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி நேற்று அளித்த பேட்டியில், “மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை, ஏராளமானோர் அறிவாலயத்தில் வழங்கியுள்ளனர். இந்த உதவிகளை, என்னால் மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி. தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதா? என்பது குறித்து இந்த நேரத்தில் நான், அரசை குறை கூற விரும்பவில்லை.”

“ஆரம்பத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டு விட்டனர். தாமதமாக, இப்போது ஓரளவு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களை திருப்திபடுத்துகின்றனர். அதனால் தான் நாங்கள் அரசை நம்பாமல், மனிதாபிமானத்தோடு இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே சென்னை வெள்ளத்தை பேரிடராக கருதாமல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறி வருவது நாகரீகமான அரசியல் நோக்கமாக தெரியவில்லை என நட்பு ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்தே கருணாநிதியின் பேட்டி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.