Home இந்தியா இடியாப்ப சிக்கலில் ராம்தேவ் நூடுல்ஸ் – பாக்கெட்களில் பூச்சி!

இடியாப்ப சிக்கலில் ராம்தேவ் நூடுல்ஸ் – பாக்கெட்களில் பூச்சி!

644
0
SHARE
Ad

ramdev-maggieபுது டெல்லி – மேகிக்கு போட்டியாக ‘சத்தான’ நூடுல்ஸ் தயாரிப்பதாக அறிவித்த யோகா குரு பாபா ராம்தேவ், தனது நிறுவனமான பதஞ்சலி சார்பில் நூடுல்ஸ்களை தயாரித்து விற்பனையை தொடங்கினார்.

இந்நிலையில், ராம்தேவின் நூடுல்சிற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், அவர்கள் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக உரிமம் எண்ணை பயன்படுத்தி உள்ளனர் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்(FSSAI) வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே, நூடுல்சில் பூச்சிகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.