ஹரித்துவார், ஏப்ரல் 30 – நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பெற்றோரை இழந்த 500 குழந்தைகளை யோகா குரு பாபா ராம்தேவ் தத்தெடுத்துள்ளார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, காத்மண்டுவில் தங்கியிருந்த யோகா குரு ராம்தேவ், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி திரும்பினார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 500 குழந்தைகளை, அவர் தத்தெடுத்துள்ளார். நேபாளத்தில் உள்ள ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடத்தில் தங்கியுள்ள ஆச்சார்ய பாலகிருஷ்ணா, தத்தெடுத்த குழந்தைகளின் தேவைகள் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வார்.
குழந்தைகள், பதஞ்சலி யோகா பீடத்தின் மருத்துவமனை மற்றும் யோகா பீடத்திற்காக புதிதாக கட்டப்பட்ட வளாகத்தில் தங்க வைக்கப்படுவர்.
அவர்களுக்கு 5-ஆம் வகுப்பு வரை கல்வி, உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி அளிக்க, பதஞ்சலி யோகா பீடம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.