கோலாலம்பூர், ஏப்ரல் 30 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு தனது உதவி தேவைப்படாது என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யுஎஸ்எம்) நடைபெற்ற தனிப்பட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், “அவர்களுக்கு (தேமு) என் உதவி தேவையில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஹூடுட்டை பிகேஆர் வரவேற்கவில்லை என்பதால், பாஸ் அவர்களுக்கு இடைத்தேர்தலில் ஆதரவளிக்காது. அதனால் தேசிய முன்னணி வெற்றியடைய வாய்ப்பு உள்ளது” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.