Home Featured நாடு நன்கொடையாளரா? நன்கொடையாளர்களா? – 2.6 பில்லியன் விவகாரத்தில் குழப்பம்!

நன்கொடையாளரா? நன்கொடையாளர்களா? – 2.6 பில்லியன் விவகாரத்தில் குழப்பம்!

502
0
SHARE
Ad

najib-razakகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் வெளியே வந்து பல மாதங்கள் ஆகி தற்போது விசாரணை நடைபெற்று வந்தாலும், இன்னும் அதிலுள்ள குழப்பங்கள் தீர்வு காணப்படாமல் தான் உள்ளது.

முதன் முதலாக, இந்த விவகாரம் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சரவாக் ரிப்போர்ட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டபோது, மலேசியர்கள் அனைவரும் பேரதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நேரத்தில் புத்ராஜெயா, அந்த 2.6 பில்லியன் ரிங்கிட் மத்திய கிழக்கில் நன்கொடையாளர் ஒருவரிடமிருந்து வந்த நிதி என்றது.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது, ‘நன்கொடையாளர்’ என்றும் ‘நன்கொடையாளர்கள்’ என்றும் இருவேறு கருத்துகளாகக் கூறப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட ‘நன்கொடையாளரை’ விசாரணை செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மத்திய கிழக்கிற்கு தனது குழுவை அனுப்பியுள்ளதாக நேற்று என்எஸ்டி தெரிவித்திருந்தது.

விசாரணைக்குழுவின் இயக்குநர் அசாம் பக்கி கூறுகையில், அண்மையில் அந்த சந்திப்பு நடந்தது என்றும், விசாரணை முடிவுக்கு வரும் வரை தற்போதைக்கு அந்த ‘நன்கொடையாளரின்’ விவரத்தை வெளியே தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

எனினும், நஜிப் நேற்று என்எஸ்டி, உத்துசான் மலேசியா மற்றும் டிவி3 ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணலில், ‘நன்கொடையாளர்கள்’ என பண்மையில் தெரிவித்துள்ளார்.

அதோடு, என்எஸ்டி மற்றும் உத்துசான் ஆகிய செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘நன்கொடையாளர்’ என்று தான் குறிப்பிட்டுள்ளன.

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, ‘நன்கொடையாளர்கள்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தகவல்: மலேசியாகினி